எனது மணவாளனே என் இதய ஏக்கமே
இனியவரே இயேசய்யா
உம்மைத் தான் தேடுகிறேன் நான்
உம்மைத் தான் நேசிக்கிறேன்
1.
உம் நாம்ம சொல்லச் சொல்ல என்
உள்ளமெல்லாம் துள்ளுதையா
உம் அன்பைப் பாடப் பாட
இதயமெல்லாம் இனிக்குதையா (2) – எனது
2.
உம் முகம் பார்க்க்ணுமே
உம் அழகை ரசிக்கணுமே
உம் பாதம் அமரணுமே
உம் சித்தம் அறியணுமே – எனது
3.
என் வாயின் சொற்களெல்லாம்
ஏற்றனவாய் இருப்பதாக
என் இதய எண்ணமெல்லாம்
உகந்தனவாய் இருப்பதாக (உனக்கு) – எனது
4.
அழகெல்லாம் அற்றுப் போகும் – உலக
எழிலெல்லாம் ஏமாற்றும்
உம் அன்பு மாறாதையா
ஒரு நாளும் அழியாதையா – எனது
5.
நான் பார்க்கும் பார்வையெல்லாம்
ஏற்றவனாய் இருப்பதாக
நான் நடக்கும் பாதையெல்லாம்
உகந்தனவாய் இருப்பதாக – எனது